இலங்கைக்கு நீச்சல், சைக்கிளோட்டம், வூஷுவில் தங்கங்கள் நீச்சல் வீரர் மெத்யூவின் வெற்றி அலை தொடர்கின்றது

  • February 8, 2016
  • 439
  • Aroos Samsudeen

Image title

(குவா­ஹாட்­டி­யி­லி­ருந்து

எஸ். ஜே. பிரசாத்)

இந்­தி­யாவின் அஸாம் மாநி­லத்தில் நடை­பெற்­று­வரும் 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் இலங்கை தனது தங்கப் பதக்க எண்­ணிக்­கையை எட்­டாக அதி­க­ரித்­துக ்­கொண்­டுள்­ளது.

எனினும் வர­வேற்பு நாடான இந்­தி­யாவின் பதக்க வேட்டை தொடர்ந்த வண்ணம் இருக்­கின்­றது.

போட்­டியின் இரண்டாம் நாளான (விழாவின் மூன்றாம் நாள்) நேற்­றைய தினம் இலங்­கையின் சாதனை நீச்சல் வீரர் மெத்யூ அபே­சிங்க, தனது தங்கப் பதக்க எண்­ணிக்­கையை 4 ஆக உயர்த்­திக்­கொண்டார்.

ஸக்கிர் ஹுசெய்ன் நீச்சல் தடா­கத்தில் நேற்று நடை­பெற்ற ஆண்­க­ளுக்­கான 50 மீற்றர் சாதா­ரண (ப்றீ ஸ்டைல்) நீச்சல் போட்­டியை 23.33 செக்­கன்­களில் நிறைவு செய்து தனது தனிப்­பட்ட தங்கப் பதக்க எண்­ணிக்­கையை நான்­காக உயர்த்­திக்­கொண்டார்.

தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் இம் முறை 11 நீச்சல் தங்கப் பதக்­கங்­க­ளுக்கு குறி­வைத்­துள்­ள­தாக மெத்யூ தெரி­விக்­கின்றார்.

இதே­வேளை பெண்­க­ளுக்­கான 200 மீற்றர் மல்­லாக்கு நீச்­சலை 2 நிமி­டங்கள் 18.09 செக்­கன்­களில் நிறைவு செய்த இலங்­கையின் கிமிக்கோ ரஹிம் தனது முத­லா­வது தங்கப் பதக்­கத்தை வென்­றெ­டுத்தார்.

ஆண்­க­ளுக்­கான 60 கிலோ மீற்றர் தேர்வு (க்ரைட்­டே­ரியம்) சைக்­கி­ளோட்டப் போட்­டியில் இலங்­கையின் ஜீவன் ஜய­சிங்க 34 புள்­ளி­களைப் பெற்று தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார்.

இதே­போட்­டியில் இலங்­கையைச் சேர்ந்த மற்­றொரு வீரர் நவீன் ரூச்­சிர 24 புள்­ளி­க­ளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்­கத்தை வென்றார்.

பெண்­க­ளுக்­கான 40 கிலோ மீற்றர் தேர்வு சைக்­கி­ளோட்டப் போட்­டியில் சுதா­ரிக்கா பிரி­ய­தர்­ஷனி 9 புள்­ளி­க­ளுடன் வெண்­கலப் பதக்­கத்தை வென்றார்.

இது இவ்­வா­றி­ருக்க, வூஷு போட்­டியில் சங்வான் நிகழ்ச்­சியில் இலங்­கையின் பீ. எல். எச். லக் ஷான் 8.86 புள்­ளி­க­ளுடன் தங்கப் பதக்­கத்­திற்கு சொந்­தக்­கா­ர­ரானார்.

மெத்யூ அபே­சிங்க நீச்­சலில் சாதனை

போட்­டியின் முதல் நாளான சனிக்­கி­ழ­மை­யன்று நீச்சல் வீரர் மெத்யூ அபே­சிங்க இரண்டு தெற்­கா­சிய சாத­னை­க­ளுடன் 3 தங்கப் பதக்­கங்­களை வென்­றெ­டுத்தார். அத்­துடன் பளு­தூக்கல் போட்­டியில் இலங்கை அணியின் உதவித் தலைவர் சுதேஷ் பீரிஸ் தங்கப் பதக்கம் வென்றார்.

ஆண்­க­ளுக்­கான 200 மீற்றர் சாதா­ரண நீச்சல் போட்­டியை ஒரு நிமிடம் 52.28 செக்­கன்­க­ளிலும் 100 மீற்றர் வண்­ணத்­துப்­பூச்சி வகை­யி­லான நீச்­சலை 55.42 செக்­கன்­க­ளிலும் நிறைவு செய்து தெற்­கா­சிய விளை­யாட்டு விழா நீச்­ச­லுக்­கான இரண்டு புதிய சாத­னை­களை நிலை­நாட்­டினார்.

அத்­துடன் தனது சகோ­தரர் கய்ல் அபே­சிங்க, செரன்த டி சில்வா, ஷெஹான் டி சில்வா ஆகி­யோ­ருடன் இணைந்து 4 தர 100 மீற்றர் சாதா­ரண தொடர் நீச்சல் போட்­டியில் பங்­கு­பற்றி அதிலும் இலங்­கைக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்தார்.

இப் போட்டித் தூரத்தை இலங்கை நீச்சல் அணி­யினர் 3 நிமி­டங்கள், 30.11 செக்­கன்­களில் நிறைவு செய்­தனர்.

இதே­வேளை, போகேஸ்­வரி புக்­கா­னானி உள்­ளக அரங்கில் நடை­பெற்ற ஆண்­க­ளுக்­கான 62 கிலோ­கிராம் எடைப்­பி­ரி­வுக்­கான பளு­தூக்கல் போட்­டியில் மொத்­த­மாக 265 கிலோ கிராம் (ஸ்னெச் 115 கி.கி., ஜேர்க் 150 கி.கி.) எடையைத் தூக்கி தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார்.

Image title

Image title

Tags :
comments