நாசா மறைத்த உண்மை: வெளியாகியது ஏலியன் தொடர்பான படங்கள்

  • February 13, 2016
  • 1208
  • Aroos Samsudeen

Image title

பல ஆண்டுகளாகவே செவ்வாய் கிரகத்தை குறித்து கடுமையாக ஆரய்ந்து வருகிறது அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா. இத்தனை கோள்கள் எம்மை சுற்றி இருக்க குறிப்பாக செவ்வாய் கிரகத்தை மட்டும் நாசா ஏன் ஆராயவேண்டும் என்று பல விஞ்ஞானிகள் முன்னரும் கேள்வி எழுப்பினார்கள்.

ஆனால் அங்கே ஏதோ இருக்கிறது என்பதனை அமெரிக்கா உணர்ந்துள்ளதாகவும். அதன் காரணமாகவே ,அவர்கள் அக்கிரகத்தை தொடர்ந்தும் ஆராட்சி செய்து வருவதாக பலர் கூறுகிறார்கள். இவ்வாறு வரும் புரளிகளில் சில உண்மை என்பது ஒரு புறம் இருக்க , இதனை நிரூபிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. இதனை ஏன் நீங்கள் முன்னர் வெளியிட வில்லை என்று கேட்டால், இது பிரம்மை என்கிறார்கள் நாசாவில் உள்ளவர்கள்.

குறித்த இந்த படத்தை எடுத்தது அமெரிக்காவால் அனுப்பப்பட்ட “கியூரியாசிட்டி” ரோவர் கார் தான். அது செவ்வாய் கிரகத்தில் இறங்கி ஊர்ந்து சென்று பல இடங்களை படம் பிடித்து அதனை பூமிக்கு அனுப்பியுள்ளது. பல புகைப்படங்களை வெளியிட்ட நாசா இதனை மட்டும் மறைத்துவிட்டார்கள். ஆனால் அங்கே வேலைசெய்யும் ஒரு நபரால் , இந்த புகைப்படம் பேஸ் புக் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இப்புகைப்படம் பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது. இதனால் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற நிலைக்கு நாசா தற்போது தள்ளப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்துள்ள நாசா விஞ்ஞானிகள். இது ஒரு பிரம்மை என்று கூறுகிறார்கள்.

இங்கே காணப்படும் நண்டு போன்ற உயிரினம் ஒன்று , மலையில் ஏறுவது போல படத்தில் உள்ளது. ஆனால் அது கல் என்கிறார்கள் நாசாவில் உள்ளவர்கள். நாம் அதனை ராட்சச நண்டு என்று நினைத்துப் பார்த்தால் அது அப்படி தான் எமக்கு தெரியும் என்று கூறுகிறார்கள் அவர்கள்.

அப்படி என்றால் ஏன் புகைப்படத்தை முதலில் மறைத்தீர்கள் என்று கேட்ட கேள்விக்கு நோ காமன்ஸ் என்று பதில் கூறிவிட்டார்கள். இது ஒரு கூட்டுச் சதி என்று , பலர் குற்றஞ்சாட்டி உள்ளார்கள். அமெரிக்கா தற்போது அண்டவெளியில் உள்ள உயிரினங்களைத் தேடி அலைகிறது.

அவர்கள் எம்மை விட புத்திசாலிகளாக இருந்தால், அவர்களது டெக்னாலஜியை கண்டு பிடிப்பது. மேலும் வேற்று கிரக வாசிகளின் உடலை ஆராய்ந்து அவர்களது ரத்த மாதிரியை எடுத்து உலகில் உள்ள தீராத நோய்களுக்கு மருந்து கண்டு பிடித்து அதனூடாக கோடி கோடியாக சம்பாதிக்க முடியுமா ? இல்லை வேற்று கிரக வாசிகளிடம் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திகளை மேலும் அவர்களுக்கு உள்ள வரப்பிரசாதங்களை பயன்படுத்த முடியுமா என்று தான் இவர்கள் ஆராட்சி தொடர்கிறது என்கிறார்கள்.Image title

எது எப்படி இருந்தாலும் அமெரிக்கா பல உண்மைகளை உலகிற்கு மறைத்து வருகிறது என்பது மட்டும் தற்போது நிரூபனமாகியுள்ளது. உண்மையில் படத்தில் இருப்பது போன்ற ராட்சச உயிரினம் செவ்வாய் கிரகத்தில் இருக்கிறது என்றால், இது தொடர்பான ஆராட்சிகளை மேற்கொள்வது நல்லது.

Tags :
comments