பௌத்த பிக்குகள் அழுத்தம், மத்ரஸா விஸ்தரிப்பு அனுமதியை ரத்துச்செய்த பிரதேச சபை

  • February 17, 2016
  • 539
  • Aroos Samsudeen

Image title

பாணந்துறை எலுவில மத்ரசாவின் மேல் மாடியை நிர்மாணிக்க வழங்கியிருந்த அனுதியை பிரதேச சபை ரத்துச்செய்தமை இனவாத செயற்பாடாகும் என உலமா கட்சி வண்மையாக கண்டித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

பாணந்துறை எலுவிலயில் உள்ள அறபு மதுரசாவை மூன்று மாடிகளாக கட்டுவதற்கு ஏற்கனவே பிரதேச சபை அனுமதி வழங்கியிருந்தது. பின்னர் சில இனவாத பிக்குகள் மேற்படி மத்ரசாவை மேல் மாடிக்கு கொண்டு செல்வதன் மூலம் கீழ் மாடி பள்ளிவாயலாகும் என முறைப்பாடு செய்ததன் மூலம் கட்டுமாணத்துக்கு பிரதேச சபை தடை விதித்திருப்பது நாட்டில் இன்னமும் இனவாத அரசாங்கமே உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரசா என்றால் அதில் இஸ்லாமிய போதனைகள் நடக்கும் இடமாகும். அதில் கல்வி கற்கும் மாணவர்கள் ஐ வேளை தொழாமல் இருக்க முடியுமா? நாட்டில் எந்தவொரு பௌத்த பாடசாலையிலும் அங்கு அவர்களின் வணக்கத்துக்காக ஒரு சிலைதானும் இல்லாமல் இல்லை. இந்த நிலையில் மத்ரசாக்களில் பள்ளிவாயல் இருக்க முடியாது என்று நாட்டில் சட்டம் உள்ளதா? இத்தகையதொரு சட்டம் நாட்டில் இல்லாத நிலையில் மத்ரசாக்களில் பள்ளிவாயல் அமைவதை சில இனவாத பௌத்த பிக்குகள் எதிர்ப்பதும் அதற்கு அரச நிர்வாகிகள் துணை போவதும் நல்லாட்சியா என்று கேட்கிறோம்.

இந்த நாட்டை யுத்தத்திலிருந்து மீட்டு முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய சுதந்திரத்தை மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருந்தும் அவரின் கடைசி இரண்டு வருட ஆட்சியின் போது இது போன்ற பிக்குகளின் இனவாத செயற்பாடுகளை கட்டு;படுத்த தவறியதன் ஒரே காரணத்துக்காகவே முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக அவரை ஒதுக்கினர். ஆனால் இன்னமும் நாட்டில் தென்னிலங்கை முஸ்லிம்களுக்கெதிராக அதே இனவாத போக்கை காணும் போது மஹிந்த போய் மைத்திரி வந்தாலும் இனவாதத்தை இவர்களால் கட்டுப்படுத்த முடியாது என அன்று ஜனாதிபதி தேர்தலின் போது உலமா கட்சி கூறியமை உண்மையாகியுள்ளது என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

Tags :
comments