பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை

  • February 28, 2016
  • 536
  • Aroos Samsudeen

Image title

பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகளை தற்காலிகமாக இடைநிறுத்திறுத்திவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தவறுகளை திருத்திக் கொள்ளுவதற்கு பொறிமுறையொன்றை உருவாக்குவதற்காக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பில் பொறிமுறையொன்றை தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags :
comments