கோப் குழு முன்னிலையில் ஆஜராக இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் தீர்மானம்

  • February 28, 2016
  • 819
  • Aroos Samsudeen

Image title

பிரதி சபாநாயகரும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவருமான திலங்க சுமதிபால, கோப் என அழைக்கப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராவதற்குத் தீர்மானித்துள்ளார்.

இதுதொடர்பாக நியூஸ்பெஸ்ட் வினவியபோது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் என்ற ரீதியில் தாம் கோப் குழு முன்னிலையில் ஆஜராவதற்குத் தீர்மானித்துள்ளதாக திலங்க சுமதிபால கூறினார்.

கடந்த கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையின் அறிக்கைகள் கோப் குழுவில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.அரசாங்க நிறுவனங்களின் அறிக்கைகள் கோப் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது.

கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையின் நியமனம் விளையாட்டுத்துறை அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அது தொடர்பான அறிக்கைகளை கோப் குழுவில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாக திலங்க சுமதிபால சுட்டிக்காட்டினார்.

அந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாமையால், எதிர்வரும் 8 ஆம் திகதி கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் பிரகாரம், வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதற்காக குழுவின் முன்னிலையில் ஆஜராவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரும், பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால மேலும் குறிப்பிட்டார்.

Tags :
comments