தரமற்ற படங்களில் நடிப்பதை விட சயீப்புடன் சுற்றுலா செல்வதை விரும்புகிறேன் – நடிகை கரீனா கபூர்

  • February 28, 2016
  • 564
  • Aroos Samsudeen

Image title

35 வய­தான கரீனா கபூருக்கு அதிக படங்கள் இல்லை. கரீ­னாவின் சினிமா வாழ்க்­கையில் மிக மோச­மான கட்டம் இது­வென சிலர் விமர்­சிக்­கின்­றனர்.

ஆனால், நடிகை கரீனா கபூர் இதை மறுக்­கிறார்.

அனைத்து வாய்ப்­பு­க­ளையும் ஏற்­றுக்­கொள்­ளாமல், சிறந்த திரைப்­ப­டங்­களை மாத்­திரம் தெரி­வு­செய்து தான் நடிப்­ப­தாக அவர் கூறு­கிறார்.

“அடுத்­த­டுத்து திரைப்­ப­டங்­களில் நடிக்க வேண்டும் என நான் எண்­ண­வில்லை. அதிக படங்கள் இல்­லா­விட்டால் காணாமல் போய்­வி­டுவோம் என்ற அச்சம் எதுவும் எனக்­கில்லை.

தர­மற்ற திரைப்­ப­டங்­களில் நடிப்­ப­தை­விட தனது கணவர் சயீப் அலி கானுடன் சுற்­று­லாவில் ஈடு­ப­டு­வதை தான் விரும்­பு­வ­தாக நடி­கை கரீனா கபூர் கூறி­யுள்ளார்.

தர­மற்ற படங்­களில் நடிப்­ப­தை­விட சயீப்­புடன் சுற்­றுலா செல்­வ­தற்கு நான் விரும்­பு­கிறேன்” என கரீனா கபூர் தெரி­வித்­துள்ளார்.

கரீனா கபூர் நடிப்பில் அடுத்­த­தாக கீ அன்ட் கா எனும் திரைப்­படம் வெளி­யா­க­வுள்­ளது. அர்ஜூன் கபூர் கதா­நா­ய­க­னாக நடிக்கும் இப் ­ப­டத்தை ஆர். பால்கி இயக்­கு­கிறார்.

பொலிவூட் நடி­கைகள் பலர் பாடல்­களை பாடு­வ­துடன் திரைப்­படத் தயா­ரிப்­பா­ளர்­க­ளா­கவும் விளங்­கு­கின்­றனர். ஆனால், இவ்­வாறு பல்­வேறு துறை­களில் ஈடு­பட வேண்­டு­மென தான் ஆர்வம் காட்­ட­வில்லை எனவும் கரீனா தெரி­வித்­துள்ளார்.

“என்னால் பாட முடி­யாது. திரைப்­ப­டங்­களை இயக்­கு­வ­தற்கோ, தயா­ரிப்­ப­தற்கோ நான் விரும்பவில்லை. ஆனால், நிச்சயமாக எனது வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டுமென நான் விரும்புகிறேன்” என அவர் கூறுகிறார்.

Tags :
comments