பல ஆண்டுகளாக மூடு விழாக் கொண்டாடும் அட்டாளைச்சேனை இலங்கை வங்கியின் ATM.

  • February 28, 2016
  • 479
  • Aroos Samsudeen

Image title

(ஏ.ஜே.எம்.நபீர்)

அட்டாளைச்சேனையின் வரலாற்றில் ஒரு மைல் கல் இலங்கை வங்கி என்பதை யாராலும் மறுத்து கூறமுடியாது.

ஏன் என்றால் பல ஆண்டுகளுக்கு முன் இங்கு இயங்கி வந்த இவ் வங்கி தவிர்க்க முடியாத காரணங்களைக் கூறி மூடப்பட்டது .இவ் வங்கியை மீண்டும் இங்கு கொண்டு வருவதற்கு பலர் பல்வேறு தியாகங்களை புரிந்தார்கள் இவர்களுக்கு அட்டாளைச்சேனை மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ் வங்கி கடந்த 2008 ஆண்டில் இருந்து இங்கு இயங்கி வருகிறது.இங்கு பல முகாமையாளர்கள் கடமையாற்றி சென்றிருக்கின்றார்கள் என்பதை யாரும் மறக்க முடியாது என்றாலும் எந்த முகாமையாளரும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் நடந்து கொள்ளாமல் வாடிக்கையாளர்களையும்,பொதுமக்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள்

எவ்வாறு என்றால் இங்கு இதுவரைக்கும் ATM இயந்திரம் பொருத்தப்படாமல் இம்மாதம்,அடுத்த மாதம் என்று கூறி ஏமாற்றுகின்றார்கள்.கிழக்கு மாகாண பிரதி முகாமையாளர் புதிய கட்டிடத்துக் இடமாற்றம் நடைபெறும் போது அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்யப்பட்டு தனி வங்கியாக இயங்கும் என்று கூறினார் வாடிக்கையாளர்களை சந்தித்த போது.

அவ்வாறு வங்கி அருகில் விசாலமான இடத்துக்கு இடமாற்றம் பெற்றது ஆனால் மக்களின் கனவு நிறாசையானது என்பது உண்மை .அவர் கூறியதைப்போன்று தனியாக வங்கி இயங்கியது வேறு எந்த மாற்றமும் நிகழவில்லை.

இதனை முகாமையாளர்களிடம் அக்கறைப்பாற்று,நிந்தவூர் போன்ற இடங்களில் போய் பெற்றுக்கொள்ளுங்கள் என கூறுகின்றார்கள்.இது தனி முஸ்லிம் பிரதேசமாக காணப்படுகின்றமையினால் தனிமைப்படுத்தப்படுகின்றது.உதாரணமாக ஏற்கனவே ATM உள்ள இடங்களில் மீண்டும் ATM இயந்திரம் பொருத்தப்படுகிறது

இது மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக அன்மையில் திறந்து வைக்கப்பட்டது

எனது ஊரை திட்டமிட்டு புறக்கணித்து வாருகின்றார் இதற்கு முகாமையாளர்கலும் உடந்தையாக செயற்படுகின்றார்கள்.

உரியவர்கள் கவனத்தில் கொண்டு தீர்வு தருமாறு வாடிக்கையாளர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

Image title

Image title

Tags :
comments