7 பெண்கள் , 6 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தில் 14 பேர் கொலை – பட்டதாரி ரத்த வெறி

  • February 28, 2016
  • 545
  • Aroos Samsudeen

Image title

மும்பை : மகாராஷ்ட்டிராவில் ஒரே குடும்பத்தில் 14 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. சொத்து பிரச்னை காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 35 வயது மதிக்கத்தக்க ;சி. ஏ, பட்டதாரி இந்த கொலையை செய்துள்ளார். மும்பையில் இருந்து 20 கி மீட்டர் தொலைவில் உள்ள தானே மாவட்டத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் அசுதோஷ் கூறியதாவது:

தானேயில் உள்ள ஒரு பூட்டிய வீட்டுக்குள் ஒரு பெண் அலறும் சப்தம் கேட்டதை அக்கம் பக்கத்தவர்கள் கேட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர் . இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். இங்கு கத்தியால் குத்தப்பட்டும், கழுத்து நெரிக்கப்பட்டும் பலர் ரத்தம் கசிந்த நிலையிலும் கிடந்தனர். முன்னதாக சிலர் உணவில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது இந்த கொலைகள் நடத்தப்பட்டிருக்கலாம் .

ஹஸ்னின் அன்வர் ( வயது 35 ) இவர் கையில் ரத்தத்துடன் கழுத்தில் தூக்கு மாட்டியபடி பிணமாக கிடந்தார். அன்வரின் தாய் தந்தை , மனைவி, குழந்தைகள் உள்பட 14 பேர் பிணமாக கிடந்தனர். பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றோம் . சொத்து பிரச்னை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று முதல் கட்ட தகவலில் தெரிகிறது இருப்பினும் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஹஸ்னின் அன்வர் வார்கர் ஒரு சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் படித்தவர் இவர் தான் 14 பேரை கொலை செய்து தானும் தற்கொலை செய்துள்ளார். தொடர் விசாரணை நடக்கிறது இவ்வாறு கமிஷனர் தெரிவித்தார்.

ஒரே குடும்பத்தில் 14 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் மகாராஷ்ட்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
comments