இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பது, பெரிய விடயமல்ல – பசில் ராஜபக்ச

  • February 28, 2016
  • 523
  • Aroos Samsudeen

Image title

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பது பெரிய விடயமல்ல என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தெஹியோவிட்ட பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எப்போது தோற்கடிக்கப்பட முடியாது என கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை மஹிந்த தோற்கடித்தார்.

எனவே இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பது ஒர் பெரிய பொருட்டு கிடையாது.

நல்லாட்சியுடன் இணைந்து கொண்டுள்ள நாம் அனைவரும் புதிய சக்தியொன்றை உருவாக்க வேண்டும்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளை தோற்கடிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச மக்களுக்கு தலைமை தாங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Tags :
comments