வாக்குறுதியை நிறைவேற்றிய கனடா பிரதமர் – இதுவரை 25.000 சிரியா நாட்டினருக்கு அடைக்கலம்

  • February 29, 2016
  • 535
  • Aroos Samsudeen

Image title

யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா அகதிகள் 25,000 பேருக்கு கனடா நாட்டில் புகலிடம் அளிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அந்நாட்டு பிரதமர் முழுமையாக நிறைவேற்றியுள்ளார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது, சிரியாவை சேர்ந்த 25,000 அகதிகளுக்கு கனடாவில் புகலிடம் அளிக்கப்படும் என லிபரல் கட்சி தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ வாக்குறுதி அளித்திருந்தார்.

தேர்தலில் அபார வெற்றி பெற்ற பின்னர், கடந்த நவம்பர் மாதம் முதல் சிரியா நாட்டு அகதிகள் பகுதி பகுதியாக கனடா நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் இறுதியாக நேற்று இரவு சிரியாவில் இருந்து 25,000-வது அகதி தனது குடும்பத்தினருடன் கனடா நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இனி அடுத்தக்கட்ட நடவடிக்கையாக 8 மாகாணங்களில் உள்ள சிரியா அகதிகளை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று அவர்களுக்கு புகலிடம் வழங்கப்படும்.

இந்த 25,000 சிரியா அகதிகளில் 50 சதவிகிதத்தினருக்கான வசதிகளை அரசாங்கத்தின் செலவில் செய்து தரப்படும். எஞ்சிய அகதிகளின் செலவினங்களை தனியார் அமைப்புகள் அல்லது இரண்டும் சேர்ந்து செலவுகளை மேற்கொள்ளும்.

மேலும், ஒட்டுமொத்த சிரியா அகதிகளுக்கும் தேவையான மீள் குடியேற்றம் மற்றும் அனைத்து வசதிகளையும் இந்த ஆண்டு இறுதிக்குள் செய்து தரப்படும் என கனேடிய அரசு தெரிவித்துள்ளது.

Tags :
comments