அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு

  • February 29, 2016
  • 692
  • Aroos Samsudeen

Image title

அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து 7 ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உடல் நிலையில் பாதிப்பு இல்லை என சிறைச்சாலைகள் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தம்மீதான சட்ட நடவடிக்கைளை விரைவுபடுத்தி தம்மை விடுதலை செய்யக்கோரியே கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் 16 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமது விடுதலைக்கான சட்டநடவடிக்கைளை துரிப்படுத்துவதாக வழங்கப்பட்ட வாக்குறுதியையடுத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு தமிழ் அரசியல் கைதிகளும் நேற்று முன்தினம் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
comments