இன்றுடன் நிறைவடையும் நிபுணர் குழுவின் பணிகள்

  • February 29, 2016
  • 725
  • Aroos Samsudeen

Image title

(எம்.ஆர்.எம். வசீம்)

அர­சி­ய­ல­மைப்பு சீர் திருத்தம் தொடர்­பாக பொது மக்­களின் கருத்­துக்கள் மற்றும் ஆலோ­ச­னை­களை பெற்றுக் கொள்ளும் நட­வ­டிக்கை இன்­றுடன் நிறை­வ­டை­கின்­றன.

இறுதி நாளான இன்று அம்­பாறை மற்றும் இரத்­தி­ன­புரி மாவட்­டங்­களில் கருத்­துக்­களை பெறும் நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­மென நிபுணர் குழுவின் தலைவர் லால் விஜே­நா­யக்க தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர்­மேலும் தெரி­விக்­கையில், அர­சி­ய­ல­மைப்பு சீர் திருத்தம் தொடர்­பாக பொது­மக்­களின் கருத்­துக்­களை கேட்­ட­றியும் நிபு­ணர்­குழு கடந்த ஜன­வரி 18ஆம் திகதி முதல் 22ஆம் திக­தி­வரை கொழும்பு மாவட்­டத்தில் பொது மக்­களின் கருத்­துக்­களை கேட்­ட­றியும் நட­வ­டிக்­கையை ஆரம்­பித்­தது.

இந்த காலப்­ப­கு­தியில் நாங்கள் எதிர்­பார்த்­த­தையும் விட மக்கள் மிகவும் ஆர்­வத்­துடன் தங்கள் கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்­தனர்.

அந்­த­வ­கையில் மின்­னஞ்சல் மூல­மாக 400க்கும் மேற்­பட்டோர் தங்கள் கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்­தனர். 140 பேர் எழுத்­து­மூ­லமும் 70 பேர் பெக்ஸ் ஊடா­கவும் யோச­னை­களை தெரி­வித்­தி­ருந்­தனர்.

258 பேர் நேர­டி­யாக எங்கள் முன்­தோன்றி தங்­க­ளது கருத்­துக்­களை மிகவும் ஆர்­வத்­துடன் தெரி­வித்­தனர்.

அத்­துடன் சமூக வலைத்­த­ளங்­க­ளான பேஸ்புக், டுவிட்டர் மூலமும் பொது மக்கள் தங்கள் கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்­தனர்.

அது­மட்­டு­மன்றி தொழிற்­சங்­கங்கள் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள் மற்றும் பேரா­சி­ரி­யர்­களும் அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக ஆக்­க­பூர்­வ­மான கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்­தனர் என்றார்.

Tags :
comments