உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில்

  • March 2, 2016
  • 831
  • Aroos Samsudeen

Image title

போர்ப்ஸ் பத்திரிகையின் 2016ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 3வது ஆண்டாக மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

2016ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் கடந்த ஆண்டு 1,826 பேர் இடம் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 1,810 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

இப்பட்டியலில் தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்(75 பில்லியன் டாலர்கள்) முதலிடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.2 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. இவர் கடந்த 22 ஆண்டுகளில் 17வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து 2 ஆவது மற்றும் 3 ஆவது இடங்கள் முறையே அமென்சியோ ஒர்டேகோ, வொரன் பவட்டும் இடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு 16 ஆவது இடம் வகித்த பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர் பேர்க், இந்த ஆண்டு 6 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Tags :
comments