மருந்து விநியோகம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு குழு நியமனம்

  • March 13, 2016
  • 540
  • Aroos Samsudeen

Image title

மருந்து விநியோகம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்றை நியமிக்க சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் அமைந்துள்ள மருந்துக் களஞ்சியங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்து வகைகளை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அரச ஔடத சட்டவாக்கல் கூட்டுத்தாபனம், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், மருத்துவ விநியோகப் பிரிவி தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை ஆகியவற்றின் உத்தியோகத்தர்களும் இந்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருந்துத் தட்டுப்பாடு நிலவுமாயின், அதனை தவிர்த்தல், விலைமனு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், மருந்து விநியோகம் போன்ற விடயங்கள் குறித்து இந்த குழு விசேட கவனம் செலுத்துமென அமைச்சு மேலும் கூறியுள்ளது.

Tags :
comments