நான்காவது ஆண்டில் கால் பதிக்கும் களம் பெஸ்ட் செய்தி இணையத்தளம்

  • April 9, 2016
  • 744
  • Aroos Samsudeen

நான்காவது ஆண்டில் கால் பதிக்கும் களம் பெஸ்ட் செய்தி இணையத்தளம்

களம் பெஸ்ட் செய்தி இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் மூன்று வருடம் பூர்த்தியடைவதுடன் நான்காவது ஆண்டில் கால் பதிக்கின்றது.

பல்வேறு சவால்களுக்கும், இடர்பாடுகளுக்கும் முகம்கொடுத்து நமது சமூகத்தின் உரிமைக்குரலாய் தனித்துவமாய் தலை நிமிர்ந்து நிற்பதற்கு வாசகர்களின் ஒத்துழைப்பே மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது.

இன்று இணையத்தளங்களின் ஆதிக்கம் நம்மை ஆட்கொண்டிருக்கின்ற ஒரு கால கட்டத்தில் நமது சமூகத்தின் உரிமையிலும், நலனிலும் நாம் அக்கரை கொண்டவர்களாக இருப்பது மிக முக்கியமாகும்.

ஒரு செய்தி நிறுவனத்தை முன்கொண்டு செல்வதென்பது கடினமான ஒரு பணியாக இருந்திட்டபோதிலும் களம் பெஸ்ட் நமக்காக உழைத்து வருகின்றது. செய்திகளையும், தகவல்களையும் முந்திக்கொண்டு தருவதில் களம்பெஸ்ட் எப்போதும் முதன்மையானதுதான்.

இலங்கையின் செய்தி இணையத்தள வரலாற்றில் பல விடயங்களை அறிமுகப்படுத்திய பெருமை களம் பெஸ்டுக்கு இருக்கின்றது. குறிப்பாக ஆசிரியர் தலையங்கத்தைக் குறிப்பிடலாம்.சமகால விடயங்கள் பலவற்றையும் உள்ளடக்கியதாக ஆசிரியர் தலையங்கம் எழுதப்படுகின்றது. பலரினதும் கருத்துக்கள் எமக்கு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது.

இந்த மூன்று வருடகாலத்தில் எமக்கு பல்வேறு வகையிலும் உதவி செய்த ஆசிரிய பீடத்தினர், ஊடகவியலாளர்கள், செய்தியாளர்கள், விளம்பரதாரர்கள்,நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், சமூகவாதிகள், இலக்கியவாதிகள் மற்றும் முதன்மையான பெருமதிப்பிற்குரிய வாசகர்கள் அனைவருக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மனமகிழ்ச்சி அடைகின்றோம்.

எதிர்காலத்திலும் களம் பெஸ்டின் வளர்ச்சிக்கும்,வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்ற அசையாத நம்பிக்கையும் எங்களிடம் இருக்கின்றது.அது மட்டுமல்ல களம் பெஸ்ட் தொடர்பான காத்திரமான கருத்துக்களையும் அவர்களிடமிருந்து எதிர்பாக்கின்றோம்.

களம் பெஸ்ட் தனி ஒருவருக்கோ அல்லது ஒரு அமைப்பிற்கோ சொந்தமானதல்ல அது ஒரு சமூகத்தின் உரிமைக்கான தடம். அதனை நாம் நேசத்தோடு வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு நாம் பங்காளர்களாக இருந்து பங்களிப்புச் செய்வோம் என்று இறைவனிடம் பிரார்த்திப்போம்.

பிரதம ஆசிரியர்

களம் பெஸ்ட் செய்தி இணையத்தளம்

Image title

Tags :
comments