ரவுப் ஹக்கீமின் அதிகாரத்தைக் குறைத்தால் மாத்திரமே இணக்கப்பாட்டிற்கு வருவேன் ஹசன் அலி காட்டம்

  • June 12, 2016
  • 1504
  • Aroos Samsudeen

Image title

(எம்.எச்.எம்.கியாஸ்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இணக்கப்பாட்டிற்கு வரலாம் என்று கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தன்னைச் சந்திக்க வரும் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களிடம் இந்தக் கருத்தை ஹசன் அலி தெரிவித்து வருகின்றாராம். செயலாளர் நாயகம் ஹசன் அலியின் இந்தக் கருத்து தலைவர் ரவுப் ஹக்கீமின் காதுகளுக்கும் எட்டியுள்ளதாம்.

கடந்த காலங்களைப்போல் அல்லாமல் இம்முறை எற்பட்டுள்ள சவால்கள் பாரிய தாக்கத்தை அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கு உண்டாக்கியுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது. அந்த வகையில்தான் இன்று இரவு முக்கியமான அவசர கூட்டத்திற்கு அம்பாரை மாவட்ட முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா மஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட அங்கத்தவர்களாக உள்ள அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த 36 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் ஒருவர் களம் பெஸ்டுக்கு தெரிவித்தார்.

இதேவேளை கிழக்கு மாகாண சபையின் கிழுள்ள சபைகளில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் போராளிகளுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற பழிவாங்கல் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கட்டாயம் கதைக்கப்படும் என்றும் குறித்த மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் உள்ள பொது நூலகங்களில் கடமையாற்றுகின்ற நூலக உதவியாளர்களுக்கு இடமாற்றம் வழங்கி தங்களது பழிவாங்கலை சில அதிகாரிகள் செய்துள்ளனர். இந்தப் பழிவாங்கல் குறித்து மாகாண சபையில் அங்கம் வகிக்கின்ற மாகாண சபை உறுப்பினர்கள் தங்களது சுயநலத்தை முன்னுரிமைப்படுத்தி வாயே திறக்காமல் இருந்து வருகின்றனர்.

Tags :
comments