ஹசன் அலி பொய் சொல்லுகின்றார்- தோம்புக் கண்டத்தில் ரவுப் ஹக்கீம் தெரிவிப்பு

  • June 13, 2016
  • 3553
  • Aroos Samsudeen

Image title

ஹசன் அலி சொல்லித்திரிவது போல நான் பல கோடி ரூபாய் பணங்களை சுருட்டிக் கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் கட்சி முக்கியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு தோம்புக் கண்டத்தில் இடம்பெற்ற அம்பாரை மாவட்டத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

பிரதியமைச்சர் பைசல் காசீம் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற பல கோடி ரூபாய் பணங்களை நான் சுருட்டிக் கொண்டதாக புதிய கதை யொன்றை ஹசன் அலி அவர்கள் பரப்பி வருவதாக பலரும் வந்து சொல்லுகின்றார்கள். கட்சியின் பணத்தை கொள்ளையடிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. இது எனக்கு கவலையை ஏற்படுத்துகின்ற விடயம். மக்கள் மத்தியில் எங்களைப் பிழையாகக் காட்டுவதற்காக இவ்வாறான பொய்யான செய்திகளை ஹசன் அலி பரப்புவது கண்டிக்கத்தக்கதாகும்.

தேர்தல் காலங்களில் கட்சியின் வெற்றிக்காக கட்சி பல விடயங்களைச் செய்துள்ளது. அது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். பதவி கிடைக்கவில்லை என்பதற்காக சிலருடன் கூட்டுச் சேர்ந்து சதி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பதவிகளைக் கொடுத்த போதல்லாம். தங்களை சமூகவாதிகளாகக் காட்டி நல்ல பிள்ளையாக நடித்தார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இவ்வாறான பொய்யர்களால் ஒருபோதும் அழித்துவிட முடியாது. வயதுக்கேற்ற பக்குவமில்லாமல் புறம் சொல்லித்திரிகின்ற இழிவான நிலைக்கு இவர்கள் வந்துவிட்டார்கள் என்றார்.

Tags :
comments