பசீர் சேகுதாவுதை கட்சியை விட்டு வெளியேற்ற தோம்புக் கண்டத்தில் தீர்மானம்?

  • June 17, 2016
  • 3438
  • Aroos Samsudeen

Image title

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவுதை கட்சியை விட்டு உடனடியாக வெளியேற்றுவதற்கு அம்பாரை மாவட்டத்தின் சுமார் 32 உயர்பீட உறுப்பினர்கள் அனுமதி வழங்கியதுடன் தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு அழுத்தமும் கொடுத்துள்ளனர்.

அண்மையில் தோம்புக் கண்டத்தில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்டதிலுள்ள உயர்பீட உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் இந்தக் கருத்து முன்வைக்கபட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலியின் விடயத்தை ஒரு பக்கம் வைத்துவிட்டு தலைவருக்கு பகிரங்கமாக பேசியும், கடிதம் எழுதியும் வருகின்ற தவிசாளர் பசீர் சேகுதாவுதீன் செயற்பாட்டை இனியொரு போதும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

அதனால் அம்பாரை மாவட்டத்தின் சகல உயர்பீட் உறுப்பினர்களும் பசீர் சேகுதாவுதை கட்சியை விட்டு இடைநிறுவத்தவதற்கு ஏகமனதான அனுமதியைத் தருகின்றோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி றக்கீப் ஆகியோர் தலைவர் ஹக்கீமுடம் அழுத்தம் கொடுத்தனர். இதற்கு அமைச்சர் ஹக்கீம் ஒன்றும் பேசாது அமைதியாக இருந்தார். தலைவர் ஹக்கீமின் அமைதி உயர்பீட உறுப்பினர்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags :
comments