முஸ்லிம்களிடையே உணர்ச்சிவசப்பட்டு, கண்கலங்கிய மஹிந்த – பேருவளையில் சம்பவம்

  • July 4, 2016
  • 728
  • Aroos Samsudeen

Image title

பேருவளை – மக்கொனையில் கடந்த வெள்ளிக்கிழமை (01) இப்தார் நிகழ்வு நடைபெற்றது. இந்த இப்தார் நிகழ்வு பேருவளை முன்னாள் நகரசபைத் தலைவர் நில்பர் கபூர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இப்தார் நிகழ்வு முடிந்து மஹிந்த ராஜபக்ஸ வெளியேறும் போது அவரை முஸ்லிம்கள் சூழ்ந்து கொண்டுள்ளனர். அவருடன் கைலாகு செய்ய முண்டியடித்துள்ளனர்.

இதன்போதே முஸ்லிம்களின் அன்பைக் கண்டு மஹிந்த ராஜபக்ஸ உணர்ச்சி வசப்பட்டு, கண் கலங்கி, தமது கண்களை கைகளால் துடைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் போது ஒரு விடயத்தையும் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது, ஜே.வி.பி. ஆயுதம் ஏந்தியிருந்த காலகட்டத்தில், தனக்கு உயிர் அச்சுறுத்தல் நிலவியதாகவும், தனக்கு முஸ்லிம்கள் பாதுகாப்பு வழங்கியதாகவும், தனது பிரச்சாராத்திற்கு ஜெனரேட்டர் வழங்கி தனக்கும், தனது பிரச்சாரங்களுக்கும் ஒளி பாய்ச்சியவர்கள் அவர்களே எனவும் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.

அதேவேளை மஹிந்த ராஜபக்ஸ, இந்த இப்தார் நிகழ்வு முடிந்தவுடன் தனக்குத் தெரிந்த முஸ்லிம் பிரமுகர்களுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து பேருவளை முஸ்லிம்கள் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் அன்பு குறித்து பெருமிதமடைந்ததாகவும் அறியவருகிறது.

Tags :
comments