கல்முனை மேயராக றகுமத் மன்சூர், சாய்ந்தமருது நகரபிதாவாக முழக்கம் அப்துல் மஜீத் முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டம் தீர்மானம்

  • July 12, 2016
  • 5712
  • Aroos Samsudeen

Image title

கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமது பிரதேசம் பிரக்கப்பட்டு சாய்ந்தமருது நகர சபையாக பிரகடணப்படுத்தப்படவுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது. இதற்கான உத்தியோகபுர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

அந்த வகையில் விரைவில் நடக்கவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு மேயராக முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சரின் புதல்வரும் பிரபல சமூக சேவையாளரும், அமைச்சர் ரவுப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளருமான றகுமத் மன்சூரையும், சாய்ந்தமருது நகர சபைக்கு முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கலைக்கப்பட்ட கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான முழக்கம் அப்துல் மஜீத் அவர்களையும் நியமிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் மட்டம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு வகையில் பல தியாகங்களைப் புரிந்து இன்றுவரை கட்சியின் தலைமைக்கு பக்ககலமாக இருந்து வரும் பிரதித் தலைவர் முழுக்கம் அப்துல் மஜீத் அவர்களை நகர முதல்வராக்குவதற்கு கட்சிப் போராளிகளும்,முக்கியஸ்தர்களும் ஆதரித்துள்ள நிலையில் உயர் மட்டமும் அதனை அங்கீகரித்து அதற்கான உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளளது.

அதேபோன்று பல தேர்தல்களில் கட்சியின் நலனுக்காக போட்டியிடாமல் விட்டுக்கொடுத்து தலைமைக்கு எந்த சந்தர்ப்பத்திலும் விசுவாசமாகவிருக்கும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் றகுமத் மன்சூரை கல்முனையின் மேயராக்குவதற்கும் உயர் மட்டம் தீர்மானித்துள்ளது.

இதன்படி கல்முனையின் மேயராக றகுமத் மன்சூரும், சாய்ந்தமருது நகர சபையின் நகர முதல்வராக முழக்கம் அப்துல் மஜீத்தும் தேர்தலின் பின்னர் நியமிக்கப்படுவது உறுதியாகிவிட்டது.

Tags :
comments