"முஸ்­லிம்­கள் பார்த்துக் கொண்­டி­ருக்க முடி­யாது"

  • July 13, 2016
  • 733
  • Aroos Samsudeen

Image title

வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்டால் வட கிழக்கில் பரந்து வாழும் முஸ்­லிம்­க­ளுக்­கென்று நிலத் தொடர்­பற்ற தனி மாகாணம் ஒன்று உரு­வாக்­கப்­பட்டு அம்­மா­கா­ணத்­திற்கு முஸ்லிம் முத­லமைச்சர் ஒருவர் நிய­மிக்­கப்­பட வேண்டும்.

தமிழ் மக்கள் தங்­க­ளுக்­கென்று முத­ல­மைச்சர் ஒரு­வரை வட­கி­ழக்கில் தேர்ந்­தெ­டுத்துக் கொள்ள முடியும். இவ்­வா­றான நிர்­வாகக் கட்­ட­மைப்பே சிறந்த பலனைத் தரும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கரு­து­வ­தா­கவும் மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்­ரபின் அபி­லா­ஷையும் இதுவே என்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் எம்.ரி. ஹசன் அலி தெரி­வித்தார்.

இணைந்த வட கிழக்கில் முஸ்லிம் முத­ல­மைச்சர் ஒரு­வரை ஏற்றுக் கொள்ளத் தயார் என எதிர்க் கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ள கருத்­து­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் எம்.ரி. ஹசன் அலி இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

‘வட கிழக்கில் முஸ்­லிம்­களின் பெரும்­பான்மை பிர­தி­நி­தித்­து­வத்தைக் கொண்­டுள்ள பிர­தேச சபைகள் ஒன்­றி­ணைக்­கப்­பட்டு நிலத் தொடர்­பற்ற தனி அல­கொன்று முஸ்­லிம்­க­ளுக்­கான மாகா­ண­மாக நிறு­வப்­பட வேண்டும்.

முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­களை ஒன்­றி­ணைத்து நிலத் தொடர்­பற்ற மாகாணம் ஒன்று உரு­வாக்­கப்­ப­டு­வது வட­கி­ழக்கில் முஸ்லிம் தமிழ் மக்­க­ளி­டையே நிலவும் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வாக அமையும்.

இந்­தி­யாவில் பாண்­டிச்­சேரி மாநிலம் நிலத் தொடர்­பற்ற மாநி­ல­மாக நிர்­வாக அல­காக அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இவ்­வா­றான ஒரு நிர்­வாக அலகே மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்­ரபின் அபி­லா­சை­யாக இருந்­தது.

வட கிழக்கில் அமையும் முஸ்­லிம்­க­ளுக்­கான மாகாணம் கல்­முனை, பொத்­துவில், சம்­மாந்­துறை ஆகிய மூன்று தொகு­தி­க­ளையும் மைய­மா­ன­தாக கொண்டு அமைய வேண்டும்.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வில் அர­சாங்கம் தீர்வுத் திட்­டத்தைவடி­வ­மைக்கும் வரை முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் பார்த்துக் கொண்­டி­ருக்க முடி­யாது. வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்கள் இது தொடர்பில் கலந்து பேசி ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வரு­வது பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்குப் பல­மாக அமையும்.

புதிய அம்­பாறை மாவட்டம் உரு­வாக்­கப்­பட்­ட­போது அங்­கி­ருந்த முஸ்­லிம்கள் பல பாதிப்­பு­களைச் சந்­தித்­தார்கள். தமது பாரிய நிலப்­ப­ரப்­பு­களை இழந்­தனர். பெரும்­பான்­மை­யினர் இவ்­வாறு தமிழ், முஸ்லிம் மக்­களின் பிர­தே­சங்­களில் குடி­யேற்­றப்­பட்டு இன­ப­ரம்பல் விகி­தா­சா­ரத்தில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்­களின் பெரும்­பான்மை பாது­காக்­கப்­பட வேண்டும் என்பதில் முஸ்லிம் காங்கிரஸும் உறுதியாக இருக்கிறது.

வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் வழங்கப்பட்டு இரு முதலமைச்சர்கள் வடக்கு கிழக்கில் இருப்பதன் மூலம் எமது குடிப்பரம்பலை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார்.

Tags :
comments