இத்தாலியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதின: 27 பேர் உயிரிழப்பு

  • July 13, 2016
  • 767
  • Aroos Samsudeen

Image title

இத்தாலியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 50 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள புக்லியா என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக ஒரே தண்டவாளத்தில் பயணித்த இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் 4 ரயில் பெட்டிகள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகின. அதில் பயணித்த 27 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்திற்கு இத்தாலியப் பிரதமர் மேட்டியோ ரென்ஸி வருத்தம் தெரிவித்துள்ளார்.

படுகாயம் அடைந்தவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் பயணித்ததற்கான காரணம் குறித்து இத்தாலிய ரயில்வே துறை அதிகாரிகள் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Tags :
comments