பசீர் சேகுதாவுதீன் கடிதத்தில் அப்படி என்னதான் உள்ளது?

  • July 14, 2016
  • 1035
  • Aroos Samsudeen

Image title

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவுத் அவர்களினால் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருக்கின்றது.

இந்தக் கடிதத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாறுஸ்ஸலாம் சாந்தி இல்லத்தின் விடயங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

கட்சிக்குச் சொந்தமான இந்தக்கட்டிடம் தனி நபர் ஒருவரின் தனிப்பட்ட கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருவதுடன் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கட்சிக்கு குறித்த தனி நபரிடமிருந்து வாடகையாக வரவேண்டியுள்ளதாக உயர்பீட உறுப்பினர் ஒருவர் நம்மிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

தவிசாளர் பசீர் சேகுதாவுதீனால் உயர்பீட உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் பதிவேற்றம் செய்வோம்.

Tags :
comments