அக்கரைப்பற்றிலுள்ள பின்தங்கிய பகுதி மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை

  • July 15, 2016
  • 862
  • Aroos Samsudeen

Image title

(எஸ்.எம்.அறூஸ்)

அக்கரைப்பற்று பிரதேத்திலுள்ள பின் தங்கிய பகுதியிலுள்ள மக்களுக்கு குடிநீர் இணைப்புக்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவுப் ஹக்கீம் உயர் அதிகாரிகளை பணித்துள்ளார்.

இதற்கமைவாக குடிநீர் இணைப்புக்களை வழங்குவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று(14) வியாழக்கிழைமை மாலை அக்கரைப்பற்றில் அமைந்துள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் இணைப்பாளரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

அமைச்சர் ரவுப் ஹக்கீமின் இணைப்பாளர் ஏ.எல்.மர்ஜூன்,தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் எம்.எம்.எம்.நஸீல், அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஜே.என்.கரீம் ஆகியோர் கலந்து கொண்டு குடிநீர் இணைப்புக்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பின்தங்கிய மக்களுக்கான குடிநீர் வழங்குவதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதுடன் இங்கு பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட சகல கோரிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் தேசிய நீர வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் எம்.எம்.எம்.நஸீல் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலுள்ள பின்தங்கிய பகுதி மக்கள் குடிநீர் வசதியின்றி மிகவும் கஸ்டப்படுவதை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரின் இணைப்பாளர் எ.எல்.மர்ஜூன் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் நிமித்தம் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image title

Image title

Image title

Tags :
comments