அட்டாளைச்சேனை வீரா்கள் பிரகாசிப்பு

  • July 15, 2016
  • 694
  • Aroos Samsudeen

Image title

(எஸ்.எம்.அறூஸ்)

அம்பாரை மாவட்ட விளையாட்டு விழாவின் இறுதி மெய்வல்லுநர் போட்டிகள் நாளை காரைதீவு கனகரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் குறிப்பிட்ட போட்டிகள் பல இன்று அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் சார்பில் கலந்து கொண்ட எம்.எல்.எம்.சஜீனாஸ் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டு தங்கப்பதக்கத்தினைப் பெற்றுள்ளார். அதேபோன்று உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் ஏ.பீ.எம்.நஹ்தீர் தங்கப்பதக்கத்தினையும், ஏ.எம்.றிஸ்வான் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

110 மீற்றர் தடை தாண்டல் மற்றும் 400 மீ்ற்றர் தடை தாண்டல் ஒட்ட நிகழ்ச்சியில் ஏ.ஜே.சிப்கார் அஹமட் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தினைப் பெற்றுள்ளார்.

அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகத்தின் வீரா் ஏ.எம்.றிஸ்வான் மிகச்சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்திய போதிலும் இரண்டாமிடத்திற்கான வாய்ப்பு அம்பாரை பிரதேச வீரருக்கும் இடையில் நிலவியபோது கூடுதல் தவறிழைத்தலில் அம்பாரை வீரருக்கு இரண்டாமிடம் வழங்கப்பட்டு றிஸ்வான் மூன்றாமிடத்தைப் பெற்றார்.

இன்று நடைபெற்ற போட்டிகளில் அட்டாளைச்சேனைப் பிரதேசம் நான்கு தங்கப்பதக்கங்களையும் ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளது. ஏனைய சகல போட்டிகளும், பரிசளிப்பு வைபவமும் நாளை சனிக்கிழமை காரைதீவு கனகரத்தினம் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

“இந்நிகழ்விற்கு அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி. வணிகசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச வீரா்களை அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.அப்துல் றஸீன் வழிநடத்திவருகின்றார்.

Tags :
comments