யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்

  • July 18, 2016
  • 520
  • Aroos Samsudeen

Image title

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது ஒரு நல்ல சூழலில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்த சம்பவத்தை பாரிய பிரச்சினையாக்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அறிக்கை ஒன்றினூடாக பாராளுமன்ற உறுப்பினர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சனையை ஒரு பகைமையான நிலைமைக்கு கொண்டு செல்வதை தவிர்த்து மாணவர்களின் ஒற்றுமையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மையினை வெளிக்கொணர வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
comments