கல்முனை நகரின் அபிவிருத்திக்காக உழைக்கும் றகுமத் மன்சூர்

  • July 18, 2016
  • 1769
  • Aroos Samsudeen

Image title

கல்முனை மாநகரத்தின் அபிவிருத்திக்காக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் இணைப்புச் செயலாளர் றகுமத் மன்சூர் பணியாற்றி வருவதாக பலரும் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.

முன்ளாள் அமைச்சரும், கல்முனைத் தொகுதியின் அபிவிருத்திப் புரட்சியின் தலை மகனுமான ஏ.ஆர்.எம்.மன்சூரின் புதல்வரான றகுமத் மன்சூர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினராகச் செயல்பட்டு வருகின்றார்.

அத்தோடு அக்கட்சியின் தலைவரான ரவுப் ஹக்கீம் பதவி வகிக்கும் தேசிய நீர்வழங்கல்,வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும் கடமையாற்றி வருகின்றார். மக்களின் பணிக்காக இரவு பகலாக உழைத்துவரும் றகுமத் மன்சூர் பதவிக்கான கர்வம் இல்லாமல் சாதாரண மனிதராக களத்தில் பணியாற்றுகின்றார்.

அரசியல் களத்தில் தேர்தல் வேட்பாளராக போட்டியிடுவதற்கு பல வாய்ப்புக்கள் வந்த போதிலும் கட்சியின் நலனுக்காக அதையெல்லாம் விட்டுக்கொடுத்து தலைமைக்கு விசுவாசமாக நடந்து கொண்டுள்ளார். இம்முறை நடைபெறவுள்ள எந்தத் தேர்தலிலாவது றகுமத் மன்சூர் போட்டியிட வேண்டும் என்பதில் கட்சி ஆதரவாளர்கள் பெரும் விருப்பம் கொண்டுள்ளதுடன் அதற்காக கடுமையாக உழைப்பதற்கும் தீர்மானித்துள்ளனர்.

அமைச்சின் இணைப்புச் செயலாளராக மாத்திரம் இருந்து பெரும் பணியாற்றி வருகின்ற றகுமத் மன்சூர் அரசியல் பதவியில் அமர்த்தப்படுகின்றபோது பலமான அபிவிருத்தியை கல்முனை மண் அடைந்து கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும்.

அரசியலில் நாகரிகமான செயற்பாட்டைக் கொண்ட றகுமத் மன்சூர் பதவி, பட்டங்களுக்காக மற்றும் ஒருவரை காட்டிக்கொடுத்து முன்னுக்கு வரவேண்டும் என்ற சிந்தனை இல்லாதவர். அண்மைக்காலமாக கல்முனை பிரதேசத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னடுத்து வருகின்றார். கஸ்டப்படும் மக்களுக்கு தன்னால் இயன்ற பங்களிப்புக்களை வழங்கியுள்ளார்.

கல்முனை நகரத்தின் துரித அபிவிருத்தித் திட்டங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அமைச்சர் ரவுப் ஹக்கீமுடன் இணைந்து இரவு பகலாக உழைத்துவருவதுடன் மக்களின் தேவைப்பாடுகளை முன்னுரிமைப்படுத்தியுள்ளார். அரசியல் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த றகுமத் மன்சூர் உயரிய பண்புகளைக் கொண்டு தனது செயற்பாடுகளை முன்னடுத்து வருகின்றார். தனது எதிரியைக்கூட காட்டமான சொல் கொண்டு விமர்சிக்காத றகுமத் மன்சூர் போன்றவர்களே இன்றைய காலகட்டத்திற்கு தேவைாயான மக்கள் பிரதிநிதிகளாகும்.

Image title

Image title

Image title

Tags :
comments