அஸ்ஸிராஜ் 94 கிரிக்கட் அணிக்கும், அஸ்ஸிராஜ் 2016 கிரிக்கட் அணிக்குமிடையிலான கிரிக்கட் போட்டி

  • July 20, 2016
  • 915
  • Aroos Samsudeen

Image title

அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகாவித்தியாலயத்தில் 1994ம் ஆண்டு கல்வி கற்ற மாணவர்களின் கிரிக்கட் அணிக்கும், இன்றைய பாடசாலை கிரிக்கட் அணிக்குமிடையிலான கிரிக்கட் போட்டி எதிர்வரும் 26ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

அணிக்கு 11 பேர் 15 ஓவர் கொண்ட இப்போட்டியில் வெற்றி பெறுகின்ற அணிக்கு பெறுமதியான கிண்ணம் வழங்கப்படவுள்ளதுடன் சிறப்பாட்டக்காரரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

இப்போட்டி நிகழ்விற்கு அதிதிகளாக அஸ்ஸிராஜ் மகாவித்தியாலய அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பதுடன் கூடுதலான மாணவர்களும் போட்டியைக் கண்டு களிக்கவுள்ளனர்.

அத்தோடு 1994ம் ஆண்டு பாடசாலை கிரிக்கட் அணிக்கு பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றி பாடசாலை அணியை மிகச்சிறந்த அணியாகக் கட்டியெழுப்பிய பிரதி அதிபராகக் கடமையாற்றும் எம்.எச்.றகுமத்துல்லா சேர் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளார்.

அஸ்ஸிராஜ் மகாவித்தியாலயம் வளர்த்துவிட்ட மாணவர்கள் பல்வேறு துறைகளிலும் நாட்டிலும், நாட்டுக்கு வெளியிலும் உயர் பதவிகளில் இருக்கின்றனர். இவ்வாறானவர்களின் ஒன்றுகூடல்கள் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றபோது இடம்பெற வேண்டும் என்பது எமது விருப்பமாகும்.

அந்த வகையில் இன்றைய சந்தர்ப்பத்தில் ஒன்று சேர்ந்திருக்கின்ற நமது பாடசாலையின் முன்னாள் மாணவர்களின் கிரிக்கட் அணியின் போட்டி பாடசாலை மட்டத்தில் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. இன்றைய பாடசாலை கிரிக்கட் அணிக்கு உற்சாகத்தையும்,பாடசாலையின் வரலாற்றையும் திரும்பிப் பார்ப்பதற்கும் இப்போட்டி காரணமாக அமைந்துள்ளது.

இப்போட்டிக்கு பிரதான அனுசரணையை ஆடைகளின் சாம்ராஜ்யம் அக்கரைப்பற்று றஸ்பாஸ் டெக்ஸ்டைல்ஸ் வழங்கியுள்ளது.

1994ம் ஆண்டு பாடசாலை கிரிக்கட் அணியில் இடம்பிடித்து விளையாடிய வீரா்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பது எமது பெரும் விருப்பமாகும். அதனால் நாட்டில் எந்தப் பகுதியில் இருந்தாலும் கிரிக்கட் போட்டிக்குரிய ஏற்பாட்டாளர் எஸ்.எம். அறூஸ் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் – 0752832283, 0768380652

Tags :
comments