அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்திற்கு நன்றி தெரிவிப்பு

  • July 22, 2016
  • 1305
  • Aroos Samsudeen

Image title

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் உள்ள ஒலுவில் கிராமத்தின் கடற்கரைப் பிரதேசத்தின் பாதிப்புக்கள் குறித்து தனிநபர் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து அந்த மக்களுக்காக குரல் கொடுத்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்திற்கு அட்டாளைச்சேனைப் பிரதேச மக்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் வாக்குகளை பதவிக்காக பெற்றுக்கொண்டு உல்லாசம் அனுபவிக்கும் அரசியல்வாதிகள் ஒலுவில் மக்களைக் கண்டு கொள்ளாது இருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த விடயத்தை கிழக்கு மாகாண சபையில் கொண்டு சென்று நியாயம் கேட்ட மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தை அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

Tags :
comments