ஹசன் அலிக்கு எம்.பி பதவியை வழங்க ஹக்கீம் தீர்மானம் – பெற்றுக்கொள்ள ஹசன் அலி இணக்கம்

  • July 22, 2016
  • 2679
  • Aroos Samsudeen

Image title

ஹசன் அலிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

தற்போது எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள அமைச்சர் ரவுப் ஹக்கீம் செயலாளர் ஹசன் அலிக்கு எம்.பி பதவியை வழங்குவதன் மூலம் அவற்றை இல்லாமல் செய்யலாம் என்ற எண்ணத்தில் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளார்.

செயலாளர் ஹசன் அலி மற்றும் தவிசாளர் பசீர் சேகுதாவுத் இருவரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதுடன் அது தொடர்பான ஆவணங்களையும், குறிப்புக்களையும் இரகசியமாக முறையில் கசிய விடுகின்றனர்.

இவ்வாறான நிலையில் ஹசன் அலிக்கு எம்.பி பதவியைக் கொடுத்து தவிசாளர் பசீர் சேகுதாவுத்தை தனிமைப்படுத்தி அரசியல் வெறிச்சத்துக்கு அவரை உட்படுத்த வேண்டுமென்பதே இதன் பிரதான நோக்கமாகும்.

ஹசன் அலிக்கு எம்.பி பதவியை பெற்றுக் கொடுத்து பிரச்சினையை இல்லாம செய்ய வேண்டும் என்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாணத்தின் முக்கிய பதவியில் உள்ளவர் இரவு பகலாக அங்கும் இங்கும் ஓடித்திரிவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
comments