ஜேர்மனின் மியூனிச் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 10 பேர் பலி

  • July 23, 2016
  • 631
  • Aroos Samsudeen

Image title

ஜேர்மனின் மியூனிச் பகுதியில் உள்ள வர்த்தக தொகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜேர்மன் நகரான மியூனிச் நேற்று (22) இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளதை ஜேர்மனிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மூசாச் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒலிம்பியா வர்த்தகத் தொகுதியில் நேற்று மாலை 6 மணிளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதை ஜேர்மன் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ள போதிலும் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

மூன்று துப்பாக்கிதாரிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதி தற்போது மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Tags :
comments