ஸிராஜியன் 94 கிரிக்கட் போட்டி இன்று அக்கரைப்பற்றில்

  • July 26, 2016
  • 1733
  • Aroos Samsudeen

Image title

அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகாவித்தியாலயத்தில் 1994ம் ஆண்டு கல்வி கற்ற மாணவர்களின் ஸிராஜியன் 94 கிரிக்கட் அணிக்கும், பாடசாலை ஆசிரிய மாணவர் கிரிக்கட் அணிக்குமிடையிலான கிரிக்கட் போட்டி இன்று 26ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

அணிக்கு 11 பேர் 15 ஓவர் கொண்ட இப்போட்டியில் வெற்றி பெறுகின்ற அணிக்கு பெறுமதியான கிண்ணம் வழங்கப்படவுள்ளதுடன் சிறப்பாட்டக்காரரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

இப்போட்டி நிகழ்வில் நீதிபதியும் அஸ்ஸிராஜ் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரும், கிரிக்கட் அணியின் முதலாவது அணித்தலைவருமான பயாஸ் றஸ்ஸாக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

கௌரவ அதிதிகளாக பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பதுடன் கூடுதலான மாணவர்களும் போட்டியைக் கண்டு களிக்கவுள்ளனர்.

அத்தோடு 1994ம் ஆண்டு பாடசாலை கிரிக்கட் அணிக்கு பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றி பாடசாலை அணியை மிகச்சிறந்த அணியாகக் கட்டியெழுப்பிய பிரதி அதிபராகக் கடமையாற்றும் எம்.எச்.றகுமத்துல்லா சேர் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளார்.

ஸிராஜியன் 94 அணியில் விளையாடுகின்ற வீரா்களின் பெயர் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எம்.அறூஸ், எஸ்.முகம்மத் முஜ்ரீப், ஏ.ஜீ.சப்ரி, எம்.எப்.பைசர், ஏ.கே.மஸாஹிர், ஏ.எம்.சுல்பிகார், பவா றினோஸ், ஏ.ஆர்.ஹஸான், ஏ.எல்.சுபுஹான், ஏ.கே.றிப்கான், ஏ.ஆர்.அஸ்பி, ஹமீட் ஆகியோர் விளையாடுகின்றனர்.

Tags :
comments