தவிசாளர் பசீர் சேகுதாவுதை மூன்று முறை சந்தித்த அமைச்சர் ரவுப் ஹக்கீம்

  • August 8, 2016
  • 2455
  • Aroos Samsudeen

Image title

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில் நாளுக்கு நாள் பகிரங்க மடல்கள் முதன்மை இடத்தைப் பிடித்து வருகின்றது.

தவிசாளர் பசீர் சேகுதாவுத்தின் பல மடல்கள் வந்துவிட்டது. அதில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமை பல விடயங்களில் குற்றம் சுமத்தியுள்ளதுடன் அதற்கான பதில்களை அளிக்கும்படியும் கோரியுள்ளார்.

ஆனால், தேவையில்லாமல் ஊடகங்களில் வருகின்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாடு தமக்கு இல்லை என்று அமைச்சர் அறிக்கை விட்டுள்ளார். இருந்தபோதும் மிக முக்கியமான முக்கியஸ்தர் ஒருவரின் மத்தியஸ்தத்தை ஏற்படுத்தி அமைச்சர் ரவுப் ஹக்கீம் மூன்று முறை தவிசாளர் பசீர் சேகுதாவுத்தை சந்தித்து பேசியுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

இந்த சந்திப்பில் பல விடயங்களில் தன்னுடன் உடன்பாட்டுக்கு வருமாறு அமைச்சர் ஹக்கீம் தவிசாளர் பசீர் சேகுதாவுதுடன் சொன்னபோதும் தனக்கு உடன்பாடு செய்து கொள்ள முடியாது என்று பசீர் அழுத்தமாகக் கூறியுள்ளாராம். அதிலும் கட்சியின் தாறுஸஸ்லாம் இல்லத்தில் இடம்பெற்றுள்ள ஊழல்கள், ஆக்கிரமிப்புக்களை மன்னிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தாறுஸ்ஸலாம் கட்டிட விடயத்தில் இடம்பெற்றுள்ள ஊழல்கள், மோசடிகள்,சட்டவிரோத செய்றபாடுகள், ஆக்கிரமிப்புக்கள் என்பவை தொடர்பில் சமார் எட்டு மாதங்கள் முயற்சி செய்து பல ஆவணங்களை தவிசாளர் பசீர் சேகுதாவுத் சேகரித்து வைத்துள்ளதாகவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.

Tags :
comments