மக்கள் காங்கிரஸ் கொள்கைபரப்புச் செயலாளர் மருதூர் அன்சார் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

  • August 13, 2016
  • 674
  • Aroos Samsudeen

Image title

(ஷபீக் ஹுஸைன்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி இளைஞர் அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட கொள்கைப்பரப்புச் செயலாளருமான மர்தூர் அன்சார் இன்று (13) சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் இணைந்துகொண்டார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்டுள்ள "வீட்டுக்கு வீடு மரம்" செயற்திட்டம் சய்ந்தமருது மகளிர் காங்கிரஸ் மற்றும் அஷ்ரப் ஞாபகர்த்த மண்டபம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிரமாத்தில் நடைபெற்ற நிகழ்வின்போதே மருதூர் அன்சார் கட்சியில் இணைந்து கொண்டார்.

இதில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், மாகணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வரும் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் முழக்கம் மஜீத் உட்பட கட்சியின் முக்கிய பல உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Image title

Image title

Tags :
comments