சுயாதீன இலத்திரனியல் ஊடக வலையமைப்பு உதயம்

  • September 1, 2016
  • 642
  • Aroos Samsudeen

சுயாதீன இலத்திரனியல் ஊடக வலையமைப்பு உதயம்

சுயாதீன இலத்திரனியல் ஊடக வலையமைப்பின் அங்குரார்ப்பண வைபவம்இன்று மாலை 6.30 மணிக்கு அக்கரைப்பற்று ரீ.எப்.சி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஏ.எல்.தவம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவுப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் கலந்து கொள்கின்றார்.

இப்பிராந்தியத்தில் செயற்பட்டு வருகின்ற முன்னணி செய்தி இணையத்தளங்களை ஒன்றினைத்ததாக இவ்வமைப்பு ஆரம்பிக்கப்படுகின்றது.

தேசியத்திலும், சர்வதேசத்திலும் முன்னணி வகிப்பதும்,விர்க்க முடியாத ஊடகமாகவும் இணையத்தள ஊடகங்கள் காணப்படுகின்றது. அந்த வகையில் இணையத்தளங்களை ஒன்றினைத்து அவர்களின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி தேவைகளை ஆராய்ந்து அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளும் முன்னடுக்கப்படவுள்ளது.

நமது பிராந்தியத்தில் வேகமாக முன்னேற்றம் அடைந்து வரும் செய்தி இணையத்தள ஊடக வளர்ச்சியில் தங்களுடைய பல்வேறுபட்ட சேவைகளையும், நலன்களை உறுதிப்படுத்துவதற்காக சுமார் 13 இணையத்தளங்கள் ஒன்றினைந்து மேற்கொள்ளும் இமு்முயற்சி பாராட்டப்பட வேண்டியதாகும்.

Image title

Tags :
comments