சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு வந்த சோதனை

  • January 21, 2017
  • 2577
  • Aroos Samsudeen

சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு வந்த சோதனை

தாறுஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகத்தில் எழுதப்பட்ட விடயங்களில் சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தொடர்பிலும் எழுதப்பட்டிருக்கின்றது. காணி உறுதியை டிபெக்ஸினால் அழித்து மாற்றி எழுதியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெயர் குறிப்பிடாமல் பதிவில் இல்லாத ஒரு அமைப்பினை வெளிக்காட்டி இப்புத்தகம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இப்புத்தகத்திலேயே சட்டத்தரணி நிசாம் காரியப்பர் குறித்தும் எழுதப்பட்டுள்ளது.

மூத்த சட்டத்தரணி என்பதுடன் ஒரு அரசியல்வாதியாகவும் உள்ள நிசாம் காரியப்பர் சட்டத்துறைக்கு எதிரான விடயத்திற்கு துனைபோய் கள்வர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளார் என்று எழுதப்பட்டுள்ள வியடம் பாரதூரமானதாகும்.

இந்த விடயத்தை சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளதுடன் இது தொடர்பில் சட்ட நடவடிக்கையினையும் எடுக்க வேண்டும். பெருந்தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் உறவினராகவும்,நம்பிக்கைக்குரியவராகவும் இருந்து வந்த நிசாம் காரியப்பர் கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நஸீருக்கு ஆதரவாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது போன்று செயற்பட்டிருக்க மாட்டார் என்பது கட்சிப் போராளிகளின் நம்பிக்கையாகும்.

அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தில் மூத்த சட்டத்தரணியாக மதிக்கப்படும் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தொடர்பில் எழுதப்பட்டுள்ள விடயம் பொய்யானதாகவே இருக்கும் பட்சத்தில் உடனடியாக இப்புத்தகம் தொடர்பில் சட்ட நடவடிக்கையினை எடுப்பதற்கு சட்டத்தரணி நிசாம் காரியப்பர் முன்வரவேண்டும்.

சட்டத்துறைத் தொழிலுடன் அரசியல் ரீதியாகவும் பதவிகளை வகித்துள்ள சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்களின் கௌரவத்திற்கு இவ்விடயம் பெரிதும் மாசு கற்பிக்க இடம் கொடுப்பதால் இவ்விடயம் பொய்யானது என்பதை நிருபிக்கின்ற பொறுப்பு சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு இருக்கின்றது.

பலரினதும் உரிமைக்காகவும், நியாயங்களிற்காகவும் நீதிப்படிகளை ஏறிய சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தன்னைப்பற்றி பிழையாக எழுதப்பட்ட விடயத்திற்காக நடவடிக்கை எடுக்காமலா இருக்கப் போகின்றார்?

Image title

Tags :
comments