இன்ப்ளுயன்சா வைரஸை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

  • March 9, 2017
  • 668
  • Aroos Samsudeen

/images/ title

இன்ப்ளுயன்சா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் தாக்கத்திற்கு இலக்கானவர்கள் ஆரம்பக் கட்டத்திலேயே உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என தொற்றுநோய்கள் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் நிபுணர் டொக்டர் சமித்த கினிகே குறிப்பிட்டார்.

இன்ப்ளுயன்சா வைரஸ் தாக்கத்திற்கு இலக்கானவர்களின் எண்ணிக்கையில் இந்த காலப்பகுதியில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

சாதாரணமாக சலிக் காய்ச்சல் ஏற்படுவதுடன், சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் வயோதிபர்களுக்கு இந்த வைரஸ் தீவிரமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொற்றுநோய்கள் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.

நோய் அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் உடனடியாக அருகிலுள்ள வைத்தியரை நாடி உரிய சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, இன்ப்ளுயன்சா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக டொக்டர் சமித்த கினிகே குறிப்பிட்டார்.

Tags :
comments