முறிகள் மோசடியை அம்பலப்படுத்திய பெண் அதிகாரிக்கு ஜனாதிபதி பாராட்டு

  • March 10, 2017
  • 719
  • Aroos Samsudeen

/images/ title

முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மோசடியை அம்பலப்படுத்திய பெண் அதிகாரி ஒருவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் தின நிகழ்வு கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

நாட்டின் அனைத்து பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெருந்திரளான பெண்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

Tags :
comments