‘நுழைந்த வழி தவறு’

  • March 10, 2017
  • 464
  • Aroos Samsudeen

/images/ title

ஜே.எ.ஜோர்ஜ் “ஒன்றிணைந்த எதிரணியின் தலைவரான தினேஷ் குணவர்தன எம்.பியை, அழைத்துச் செல்வதற்காக பொலிஸார், சபைக்குள் புதன்கிழமையன்று (08) நுழைந்த வழி தவறானது” என்று, அக்கட்சியின் மற்றுமொரு எம்.பியான வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய வாசுதேவ எம்.பி, “உறுப்பினர்கள், சபைக்குள் நுழையும் கதவுகளின் ஊடாகவே, பொலிஸார் அவைக்குள் பிரவேசித்தனர். இது தவறானது. பிரதான நுழைவாயிலின் ஊடாகவே, பொலிஸார் வந்திருக்கவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர், “ சபைக்குள், பொலிஸார் எவ்வாறு நுழைந்தனர்கள் என்பதைத் தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Tags :
comments