அரசாங்கத்தை இலகுவில் கவிழ்க்க முடியாது – ஜனாதிபதி

  • March 13, 2017
  • 405
  • Aroos Samsudeen

/images/ title

வெல்லவாய பகுதியில் மக்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வு வெல்லவாய பொது மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி தெரிவித்த கருத்து…

ஊடக சுதந்திரத்தை பயன்படுத்தி சிலர் அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர். நீங்கள் வீட்டில் இருந்து மாலை வேளையில் தொலைகாட்சியை பார்த்தால் இந்த அரசாங்கம் விரைவில் கவிழும் என சிலர் கூறுவதை காணலாம். அதேபோன்று மேலும் சிலர் அரசாங்கம் தொடர்பில் பல்வேறு விளக்கங்களை முன்வைக்கின்றனர். ஊடகங்களில் கூறப்பட்டாலும் இந்த அரசாங்கத்தை இலகுவில் கவிழ்க்க முடியாது என்பதை நான் மிகவும் தெளிவாக கூறவேண்டியுள்ளது.

இதன்போது ஜனாதிபதி சிலருக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கினார்.

இதேவேளை வெல்லவாய ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவும் ஜனாதிபதி தலைமையில் இன்று (13) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

முதலாவது நோயாளரின் பெயரை ஜனாதிபதி பதிவேட்டில் பதிவு செய்தார்.

வைத்தியசாலையின் ஊழியர்களுடனும் ஜனாதிபதி இதன்போது கலந்துரையாடினார்.

Tags :
comments