சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழு

  • March 15, 2017
  • 422
  • Aroos Samsudeen

/images/ title

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கப்பல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சு, கடற்படை மற்றும் விமான படையினருடன் இணைந்து இன்று விசேட குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

ஏரீஸ் 13 என்ற எரிபொருள் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் தகவல் நேற்று (14) பிற்பகல் வெளியானது

கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி மாலை 5.30 அளவில் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சோமாலியாவின் மொகடிசூ துறைமுகம் வரை பயணத்தை ஆரம்பித்துள்ளது.

ஏரீஸ் 13 என்ற கப்பலுடனான தொடர்புகள் கடந்த 13 ஆம் திகதி முதல் துண்டிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் ஊடாக இலங்கை பணியாளர்கள் 8 பேர் குறித்த கப்பலில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொமரோஸ் கொடியுடன் கப்பல் பயணித்துள்ளதுடன், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் நிறுவனமொன்று அதன் முகாமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

இதேவேளை, கப்பலிலுள்ள இலங்கை பணியாளர்கள் 8 பேரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும், வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதுக்குழுவினருடனும் தொடர்ந்து தொடர்பினை ஏற்படுத்தி மேலதிக தகவல்களை கேட்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
comments