அட்டாளைச்சேனைக்கு எம்.பி தேவையில்லை?

  • March 15, 2017
  • 2534
  • Aroos Samsudeen

/images/ title

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படவுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பிற்படுத்துமாறு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் கட்சித் தலைமை ரவுப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளதாக கதைகள் கசிந்து வருகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் சவுதி அரேபிய நாட்டுக்கான விஜயத்தின் பின்னர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும், அக்கரைப்பற்றைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்திற்கு மாகாண அமைச்சுப் பதவியும் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் அட்டாளைச்சேனைப் பிரதேசம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்காமல் ஏமாற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கு அம்பாரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினை காரணமாக அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியல் எம்.பி பதவியை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கிடைக்கவுள்ள தேசியப்பட்டியல் எம்.பி பதவியை பிற்படுத்தி அட்டாளைச்சேனைக்கு வழங்குமாறு சில முக்கியஸ்தர்கள் கிழக்கின் பெரியவர் ஊடாக தலைமைக்கு சொல்லியுள்ளதாக அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் சந்திக்கு சந்தி கதைக்கப்பட்டு வருகின்றது.

அட்டாளைச்சேனை மக்களின் நீண்டகால தவமாக இருந்து வரும் எம்.பி பதவிக்கு வேட்டு வைக்காமல் உடனடியாக அந்தப் பதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அட்டாளைச்சேனை மத்திய குழு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கட்சிப் போராளிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags :
comments