அட்டாளைச்சேனை மத்திய குழு முக்கியஸ்தர்கள் அன்ஸிலுடன் சந்திப்பு

  • March 17, 2017
  • 2198
  • Aroos Samsudeen

/images/ title

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் அக்கரைப்பற்று மத்திய குழு உறுப்பினர்கள் சிலர் உட்பட முக்கிய ஆதரவாளர்கள் நேற்றிரவு அட்டாளைச்சேனை தைக்கா நகரில் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலுடன் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துக்களைப் பரிமாறியுள்ளதாக தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கின்ற விடயங்கள் மற்றும் ஹசன் அலி தரப்பின் முன்னடுப்புக்கள் தொடர்பில் இங்கு கலந்து கொண்ட கட்சி முக்கியஸ்தர்களுக்கு தவிசாளர் அன்ஸில் விளக்கம் அளித்துள்ளார்.

சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Tags :
comments