கணவன் கொலை: மனைவிக்கு மறியல்

  • April 28, 2017
  • 455
  • Aroos Samsudeen

/images/ title

தனது கணவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மனைவியை, எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கம்பஹா நீதவான் நீதிமன்றம், நேற்று (27) உத்தரவிட்டுள்ளது.

கம்பஹா, மீகஹாவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட அக்குறுமுல்ல, தெல்கொட பகுதியிலுள்ள வீட்டில் வைத்து, கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாயத்தர்க்கம் கைகலப்பாக மாறியதிலேயே இந்தச் சம்பவம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்குறுமுல்ல, தெல்கொட பகுதியைச் சேர்ந்த 28 வயதான நபரொருவரே கொல்லப்பட்டுள்ளார் என்று தெரிவித்தபொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
comments