அம்பாரை மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் – ஹக்கீம் இறக்காமம் விரைகின்றார்.

  • April 28, 2017
  • 886
  • Aroos Samsudeen

/images/ title

இறக்காமம் பிரதேச மாயக்கல் மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றக்கோரியும், மலையடிவாரத்தில் உள்ள முஸ்லிம்களின் காணியில் பலவந்தமாக அமைக்கப்படவுள்ள விகாரையை நிறுத்தக் கோரியும் முஸ்லிம்கள் பாரிய கண்டன பேரணியென்றை இன்று வெள்ளிக் கிழமை அம்பாரை மாவட்டம் முழுவதும் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதன் பிரதான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இறக்காமத்தில் இடம்பெறவுள்ளது. ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து இப்பிரதேச மக்கள் ஒன்றினைந்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னடுக்கின்றனர்.

அத்தோடு அக்கரைப்பற்றிலும் ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. அக்கரைப்பற்று மக்கள் இதனை முன்னடுக்கின்றனர்.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம், விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் இன்று இறக்காமத்திற்கு வருகை தரவுள்ளதாக களம் பெஸ்ட் இணையத்தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

Tags :
comments