(எம்.எம்.சபீர் – பாலமுனை)
இறக்காமம் மாணிக்க மடு சிலையை அகற்றக் கோரியும், முஸ்லிம்களின் காணியில் விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்த்தும் அக்கறைப்பற்று பட்டினப்பள்ளிவாசல் முன்னால் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கூடுதலான பொது மக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அப்துல் லத்திபிடம் ஆரப்பாட்டக்காரர்கள் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.