மே தினக் கூட்டத்திற்கு வராவிட்டாலும் மஹிந்த சு.க விலிருந்து நீக்கப்படார் : சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவிப்பு

  • April 30, 2017
  • 826
  • Aroos Samsudeen

இலங்கையில் மிகப்பெரிய மே தினக்கூட்டம் கண்டியிலேயே இடம்பெறும். எனவே கண்டிக்கு அதிகளவிலான மக்கள் தொகை வந்த நாளாகவும் இம்முறை இடம்பெறப்போகும் சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் பதிவாகும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

/images/ title

அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச , பிரசன்ன ரணதுங்க உள்ளடங்களாக கூட்டு எதிரணியில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் எவருக்கு எதிராகவும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாக தீர்மானிக்கப்படவில்லை  என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கடசியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் அமைச்சர்களுமான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தினை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. இம்முறை  கட்சியில் இடம்பெறப்போகும் மே தினக்கூட்டம் இலங்கையின் மிகப்பெரிய கூட்டமாக அமைந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

Tags :
comments