மைதானத்தில் ஆக்ரோஷமாக செயற்படும் கம்பீரின் மனிதநேய செயல் : பாராட்டும் கிரிக்கெட் ரசிகர்கள்!

  • April 30, 2017
  • 833
  • Aroos Samsudeen

இந்தியாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட 25 சி.ஆர்.பி.எப். வீரர்களின் குழந்தைகளுக்காள முழு கல்விச் செலவினையும் ஏற்றுக்கொள்வதாக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

/images/ title

மைதானத்தில் விளையாடும் போது மிகவும் ஆக்ரோஷத்துடன் விளையாடும் ஒரு வீரர் என்றால் அது கௌதம் கம்பீர்தான். 

இவ்வாறு போட்டியில் ஆக்ரோஷத்தை காட்டும் கம்பீர் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு இவ்வாறான உதவிகளை வழங்குவது கிரிக்கெட் ரசிகர்களால் அதிகமாக பேசப்படுகின்றது.

இந்தியாவின் சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கலபதர் என்னும் இடத்தில் கடந்த திங்கட்கிழமை சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்த மத்திய ரிசர்வ் படையினர் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இதில் 25 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இவர்களுக்கான இரங்கள் வெளியிடும் வகையில் கொல்கத்தா அணி வீரர்கள் பூனே அணிக்கெதிரான போட்டியில் கையில் கறுப்பு நிற பட்டி அணிந்திருந்தனர்.

இவ்வாறு கறுப்பு பட்டி அணிந்து இரங்கல் தெரிவித்தது மாத்திரமின்றி, வீரர்களுக்கான உதவிகளை வழங்க முன்வந்த கம்பீரின் செயல் அனைவராலும் பாராட்டப்படுகின்றது.

Tags :
comments