இன்று சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம்

  • May 3, 2017
  • 670
  • Aroos Samsudeen

உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம் இன்றாகும்.

ஜனநாயகத்தின் காவலனாய் மக்களின் தோழனாய் தோளோடு தோள் கொடுத்து அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புவதில் ஊடகங்கள் என்றுமே முன்னிற்கின்றன.

மக்களுக்காய் குரல் கொடுக்கின்ற சந்தர்ப்பங்களில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களும் தடைகளும் ஏராளம்.

அந்த வகையில் யுனெஸ்கோ அமைப்பின் பரிந்துரைக்கு அமைய 1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் பத்திரிகை சுதந்திர தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

‘தீர்மானமிகு தருணங்களில் விமர்சனப் பார்வை கொண்டோர்’ என்பதே இம்முறை சர்வதேச ஊடக தினத்தின் தொனிப்பொருளாகும்.

1991 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி ஆபிரிக்கப் பத்திரகைகளால் கூட்டாக பத்திரகை சுதந்திர சாசனம் உருவாக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது இது உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம் பிரகடனப்படுத்தப்பட காரணமாய் அமைந்தது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அனைத்து அடக்கு முறைகளும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியா குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் இல்லாதொழிக்கும் பட்சத்தில் முழு சமூகத்திலும் சமாதானமும், நீதியும் நிலைநாட்டப்படும் எனவும் ஐ.நா செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் சுதந்திர உடகத்தை கௌரவித்து, அதற்கான கொள்கைகளை மீண்டும் வலியுறுத்தி இந்தநாளை அனுஷ்டிப்பது அவசியமானதொன்று எனவும்அவர் கூறியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் பல்வேறு பட்ட சந்தர்ப்பங்களில் இழைக்கப்பட்ட துன்பங்கள் மற்றும் ஒழிப்பு செயற்பாடுகளால் ஊடகவியலாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.

இந்த சந்தர்ப்பத்தில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் (நுஜா) ஊடகவியலாளர்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

/images/ title

 

Tags :
comments