ரணிலின் கூட்டாளியான ஹக்கீமால் மாகாணக் காரியாலயம் இடம் மாறுவதை தடுக்க முடியாதா?

  • May 4, 2017
  • 1330
  • Aroos Samsudeen

/images/ title

சாய்ந்தமருதில் இயங்கி வந்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண தலைமைக் காரியாலயம் அம்பாறைக்கு இடமாற்றப்பட்டிருப்பது தொடர்பில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் பெரும் முயற்சியின் காணரமாக கிழக்கு மாகாணக் காரியாலயம் முன்னால் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அலகப்பெருமவினால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களின் இளைஞர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சிறந்த சேவையாற்றி வந்த நிலையில் இனவாதத்தை முன்னிறுத்தி தனது அரசியல் மற்றும் பண பலத்தைக் கொண்டு சிங்கள அதிகாரிகள் ஒரு சிலரின் ஒத்துழைப்புடன் அம்பாரைக்கு மாற்றியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்

இவ்விடயம் தொடர்பில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதுடன் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளருக்கும் தெரியப்படுத்தியதுடன் தனது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். அத்தோடு பாராளுமன்றத்திலும் விசேட உரை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார்.

இளைஞர் விவகார அமைச்சரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்விடயத்தில் இனவாத அமைச்சர் தயா கமகேவுக்கு ஆதரவளிப்பதாக நம்பப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மிக நெருங்கிய நண்பராகவும், ஆட்சிப் பங்களராகவும் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் ஏன்? மெளனமாக இருக்கின்றார் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் கேட்கப்படுகின்றது.

கட்சித் தலைவர் என்ற வகையிலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டவர் என்ற வகையில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் பிரதமருடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.

Tags :
comments